’’நாங்கள் 2 ஆயிரம் பேர் இருக்கிறோம்..’’-சீசன் டிக்கெட் சங்கத்தினர் கணேசமூர்த்தி எம்.பி.யிடம் வைத்த கோரிக்கை

 

’’நாங்கள் 2 ஆயிரம் பேர் இருக்கிறோம்..’’-சீசன் டிக்கெட் சங்கத்தினர் கணேசமூர்த்தி எம்.பி.யிடம் வைத்த கோரிக்கை

ஈரோடு மார்க்கமாக கோவைக்கு பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சீசன் டிக்கெட் சங்கத்தினர் கணேசமூர்த்தி எம்.பி.யிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ’’எங்களது சங்கத்தில் 1,038 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் அல்லாதவர்கள் சுமார் 2000 பேர் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் தினமும் வேலை, வியாபாரம் விஷயமாக ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு சென்று வருகிறோம்.

’’நாங்கள் 2 ஆயிரம் பேர் இருக்கிறோம்..’’-சீசன் டிக்கெட் சங்கத்தினர் கணேசமூர்த்தி எம்.பி.யிடம் வைத்த கோரிக்கை

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. 2 மாதங்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்தோம். ஜூன் மாதம் முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், தற்போது சொந்த வாகனத்திலும், பஸ்சிலும் வேலைக்கு சென்று வருகிறோம். பஸ்சில் திருப்பூர் செல்ல 2 மணி நேரம் ஆகிறது. ரெயிலில் (சாதாரண பாசஞ்சர்) செல்லும் போது ஒரு மணி நேரம் தான் ஆனது. பஸ்சில் சமூக இடைவெளி இல்லாமல் குறைந்தது 100 பயணிகள் அளவில் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. பஸ்சில் திருப்பூர் சென்றுவர மாதத்திற்கு ரூ.3ஆயிரம் கட்டணம் செலவாகிறது. இதுவே ரயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்றுவர மாதத்திற்கு சீசன் டிக்கெட் மூலம் ரூ.220 மட்டுமே ஆனது.

பஸ்சில் செல்வதால் எங்களுக்கு பொருளாதார இழப்பு மட்டும் அல்லாமல் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, தினசரி காலை நேரத்தில் ஈரோட்டில் இருந்து திருப்பூர்-கோவை வரையும், அதேபோல். கோவையில் இருந்து ஈரோடு வரை மாலையிலும் ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரயில் சேவை நிறுத்துவதற்கு முன்பு பலர் சீசன் டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர். ரயில் சேவை நிறுத்தியதால் அந்த சீசன் டிக்கெட் காலாவதி ஆகிவிட்டது. அதனால் அந்த சீசன் டிக்கெட்டுக்கு, ரயில் சேவை தொடங்கும் போது கால நீட்டிப்பு செய்து தர ஆவண செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளனர்

மனுவை பெற்றுக்கொண்டு கணேச மூர்த்தி, கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.