• April
    06
    Monday

Main Area

Main



உங்க காசு ஒன்னும் எங்களுக்கு வேணாம்..டாஸ்மாக்கை மூடுங்க : மதுரை நந்தினி அதிரடி !

Nandhini
Nandhini

மதுரையை சேர்ந்த நந்தினி என்ற சட்டக்கல்லூரி மாணவி பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தனது தந்தையுடன் இணைந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2014ல், நந்தினியும், அவரது தந்தையும், துண்டுப் பிரசுரம் வழங்கியதையடுத்து  அவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில்  வெளிவந்தார்.

ttn

அந்த வழக்கில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி வரை நந்தினியையும் அவரது தந்தையையும் திருப்பத்துார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் வெளியே வந்த நந்தினி தனது பள்ளிக் கால  நண்பர் குணா ஜோதிபாசுவை திருமணம் செய்துக் கொண்டார். 

ttn

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் சர்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கும் திட்டத்தை இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைத்தார். இதற்கு, பொங்கல் இனாம் 1000 ரூபாய் வேண்டாம். மக்களுக்குத் தீங்கு விளைவித்து குடும்பங்களை அழிக்கும் டாஸ்மாக்கை மூடுங்கள் என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.