’கொரோனா காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை’ மத்திய அரசு கைவிரிப்பு

 

’கொரோனா காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை’  மத்திய அரசு கைவிரிப்பு

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 67,88,197 பேரும், இந்தியாவில் 50,20,360 பேரும், பிரேசில் நாட்டில்  43,84,299 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரை 50 லட்சம் பாதிப்பை அமெரிக்கா மட்டுமே அடைந்திருந்தது. தற்போது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

’கொரோனா காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை’  மத்திய அரசு கைவிரிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய நோயாளிகளாக 90,123 பேர் அதிகரித்திருக்கின்றார்கள் 1290 பேர் இறந்திருக்கிறார்கள்.

நோய்த் தொற்றியவர்கள் மட்டுமல்ல முன்கள வீரர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் எனப் பலரும் இந்தக் கொரோனா காலத்தில் இறந்திருக்கிறார்கள்.

சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அது பதிலில், கொவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் காரணமாக உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை. அளிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் அதில் இருந்தது.

’கொரோனா காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை’  மத்திய அரசு கைவிரிப்பு

மேலும் அந்தக் குறிப்பில், மருத்துவமனைகளும் சிகிச்சை மையங்களும் மாநிலப் பட்டியலில் வருவதால், கொவிட்-19 பெருந்தொற்றின் போது பணியின் காரணமாக உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் பற்றிய தகவல்கள் மத்திய அரசிடம் இல்லை.

ஆனால், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுக்களை அமைக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களின் உடல் நிலையைக் கண்காணிப்பதற்காக ஒரு அலுவலரை மருத்துவமனைகள் நியமிக்க வேண்டும்.

’கொரோனா காலத்தில் இறந்த தூய்மை பணியாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை’  மத்திய அரசு கைவிரிப்பு

மருத்துவமனைகளில் கொவிட் தொடர்புடைய மற்றும் கொவிட் தொடர்பில்லா பகுதிகளின் மேலாண்மை குறித்த அறிவிக்கை ஒன்றை 2020 ஜூன் 18 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டது.

முதியோர் இல்லங்களை நடத்தும் முகமைகளுக்கு பெருந்தொற்றின் காரணமாக முன்பணம் வழங்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் முடிவெடுத்தது. 2020-21-ஆம் ஆண்டில் இது வரை ரூ 83.47 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது’ என்று தெரிவித்துள்ளது.