ஊரடங்கை நீடிக்கப் பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி!

 

ஊரடங்கை நீடிக்கப் பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வரும் நிலையில், நாளையோடு அந்த ஊரடங்கு நிறைவடைகிறது. அதனால் ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 2.30 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த ஆலோசனைக் கூட்டம் தற்போது நிறைவடைந்து.

ஊரடங்கை நீடிக்கப் பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி!

இந்த நிலையில் மருத்துவர்கள் நிபுணர்கள் குழு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். அப்போது, ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீடிக்க அவசியம் இல்லை எனவும் ஊரடங்கை நீடிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து சுவை, மணம் தெரியாவிட்டால் உடனடியாக அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி தான் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.