“உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார் . அத்துடன் நீட் தேர்வு தொடர்பான தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் பொதுமக்கள் நீட் தேர்வு குறித்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

“உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிரான பாஜக வழக்கு விசாரணையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க உச்ச நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு, தேர்தல் அறிக்கையில் அறிவித்ததன் அடிப்படையில் கொள்கை முடிவாக குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதை தொடர்ந்து கரு. நாகராஜன் வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.