kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


காத்திருக்க முடியாது! முதல்ல தடை போட்டு விடுவோம்... ராம் விலாஸ் பஸ்வான் உறுதி

ராம் விலாஸ் பஸ்வான்
ராம் விலாஸ் பஸ்வான்
Loading...

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நாளுக்கு நாள் குப்பை மலை போல் குவிந்து வருகிறது. மேலும், சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்குகிறது. இதனால் இதன் பயன்பாட்டை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நாடு முழுவதும் தடை மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரி பேக்

இந்த சூழ்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டிப்பாக தடை செய்யப்படும். ஆனால் படிப்படியாக தடை அமல்படுத்தப்படும். நாங்கள் தற்போது பழக்கத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 
நான் எனது அலுவலகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நீக்கி விட்டேன். இந்திய உணவு கழகத்தின் குடோன்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். பயன்படுத்திய பிறகு உடனே தூக்கி எறியக்கூடிய எந்த பிளாஸ்டி பொருளும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்தான்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தினால் வேலை இழப்பு மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுவது குறித்து அவர் குறிப்பிடுகையில், பிளாஸ்டிக்கு பதிலான மாற்று பொருட்கள்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். பிளாஸ்டிற்கு மாற்றுகளுக்காக காத்திருக்க முடியாது. திட்டம் மற்றும் தடை ஒரே நேரத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.