’வெற்றி பாதையில் இருக்கிறோம்’ ஜோ பைடன் நம்பிக்கை

 

’வெற்றி பாதையில் இருக்கிறோம்’ ஜோ பைடன் நம்பிக்கை

ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் இருக்கும் மீடியாக்களில் அப்டேட் ஆவது அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் பற்றியே. கொரோனா கால சூழலிலும் நேற்று பரபரப்பராக நடந்து முடிந்திருக்கிறது அமெரிக்கத் தேர்தல் வாக்குப் பதிவு.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நேற்று பரபரப்பாக நடந்து முடிந்தது தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார்.

’வெற்றி பாதையில் இருக்கிறோம்’ ஜோ பைடன் நம்பிக்கை

தற்போது அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இப்போதைய நிலைமைப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 224 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் 212 இடங்களில் முன்னிலையில் உள்ளார்கள்.

’வெற்றி பாதையில் இருக்கிறோம்’ ஜோ பைடன் நம்பிக்கை

இந்நிலையில் முக்கியமான அறிக்கையை இன்று இரவு வெளியிடப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஜனநாயக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் ட்விட் செய்திருக்கிறார்.

அதில், ”நான் தேர்தலில் நாங்கள் வெற்றியின் பாதையில் இருப்பதாக நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.