“திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்… கைகட்டி அமர்ந்த சர்ச்சை புகைப்படம்” – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்?

“திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்… கைகட்டி அமர்ந்த சர்ச்சை புகைப்படம்” – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்?

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு ஜூலை 31ஆம் தேதி பிறந்தநாள். அன்றைய நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைரும் மக்களவை எம்பியுமான திருமாவளவன் அவரின் வீட்டுக்குச் சென்றார். அப்போது இருவரும் அருகே அமர்ந்து பேசும் ஒரு புகைப்படம் வெளியானது. சோபாவில் ராஜகண்ணப்பனும், சாதாரண பிளாஸ்டிக் சேரில் திருமாவளவனும் அமர்ந்து பேசுவது போல இருந்தது. அதேபோல திருமா அமைச்சர் முன்பு கைகட்டி அமர்ந்தது போலவும் இடம்பெற்றிருந்தது.

“திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்… கைகட்டி அமர்ந்த சர்ச்சை புகைப்படம்” – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்?

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அமைச்சர் திருமாவளவனை சோபாவை அமர வைக்காமல் பிளாஸ்டிக் சேரில் கைகட்டி அமர சொல்லி மரியாதைக் குறைவாக நடத்தியதாக கடிந்து கொண்டனர். அது மட்டுமில்லாமல் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இப்படியா அங்கே அமர்வது என திருமாவையும் சாடி சமூக நீதி கொப்பளிக்கும் சிலர் விமர்சித்தனர். இது தொடர்பாக விளக்கமளித்த திருமாவளவன், “அமைச்சர் ராஜகண்ணப்பன் அருகில் இருக்கும் சோபாவில் அமருங்கள் என என்னிடம் மூன்று முறை கூறினார்.

“திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்… கைகட்டி அமர்ந்த சர்ச்சை புகைப்படம்” – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்?

அந்த நாற்காலி சற்று இடைவெளியிலும், இடையில் சிலையும் இருக்கிறது. எனவே, இது எனக்கு வசதியாக இருக்கிறது எனக் கூறி, அங்கிருந்த மற்றொரு இருக்கையை நானேதான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். நான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், விசிக வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார்கள். கைகட்டி உட்காருவது என்னுடைய பழக்கம். என் அம்மா முன்பும், கட்சித் தொண்டர்கள் முன்பும் கை கட்டிக்கொண்டு இருப்பேன். இதையெல்லாம் அரசியல் ஆக்குவது என்பது அவர்களின் இயலாமையைக் காட்டுகிறது” என்றார்.

“திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர்… கைகட்டி அமர்ந்த சர்ச்சை புகைப்படம்” – என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்?

இச்சூழலில் இன்று தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த அமைச்சர் ராஜகண்ணப்பனின் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கமளித்த அவர், “இதனை தேவையிலாமல் அரசியல் செய்கின்றனர். திருமா எப்போதும் அப்படித்தான் உட்கார்ந்திருப்பார். நான் சோபாவில் உட்காரச் சொன்னேன். ஆனால் அவர் அமரவில்லை. நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள். அந்தக் காலத்தில் பாயில் அமர்ந்து பேசியிருக்கிறோம். சாதாரண நிகழ்ச்சி அது. அதனைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.