பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

 

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது என்பது பற்றிக் காண்போம்.

பீட்ரூட்டை நறுக்கி சாறு எடுத்து அதை முகம், கை, கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். பீட்ரூட்டில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையை அகற்றி பொலிவைத் தரும். மேலும் இதில் இரும்பு, பாஸ்பரஸ், புரதச்சத்து உள்ளது. இவை சருமத்துக்கு ஆரோக்கியத்தையும் பிங்க் நிறை பொலிவையும் தரும்

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

பீட்ரூட்டை சாரு எடுத்து குடிப்பது உடலுக்குள் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். அந்த சாரை எதையும் கலக்காமல் அப்படியே சருமத்தில் பூசலாம். சருமத்தில் ஊசி 10 – 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் சருமம் பொலிவு பெறும். பீட்ரூட்டை கொஞ்சம் வேக வைத்து, மசித்தும் பூசலாம்.

கருவளையத்தைப் போக்க…

கண்களைச் சுற்றி வீக்கம், கருவளையம் இருந்தால் அதை போக்க பீட்ரூட் பயன்படும். பீட்ரூட்டில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. அது கருவளையத்தைப் போக்க உதவுகிறது.

சிறிதளவு பீட்ரூட் சாற்றுடன் பால், தேன் விட்டு நன்கு கலந்துகொள்ள வேண்டும். பருத்தி பஞ்சை தொட்டு அதைக் கொண்டு கருவளையத்தின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கருமையான உதடுக்கு…

சிலருக்கு இயற்கையாகவே உதடுகள் கருமையாக இருக்கும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு உதடு எப்படி கருமையாக இருக்குமோ அதைப் போல இருப்பதால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலையாக இருப்பார்கள். பீட்ரூட் சாறு எடுத்து அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த சாற்றை உதட்டில் தடவி நன்கு ஊற விட வேண்டும். இப்படி செய்யும்போது உதட்டில் உள்ள விடாப்பிடியான கருமையான செல்களை அது அகற்றும்.

முடி உதிர்தல் பிரச்னை நீங்க…

ஊட்டச்சத்துக் குறைபாடுதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய முடி உதிர்வுக்கு பீட்ரூட் சிறந்த தீர்வாக அமைகிறது. பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை முடி உதிர்வை, பிளவுபடுவதைத் தடுக்கின்றன.

பீட்ரூட் சாற்றை மட்டும் தடவி ஊறவிட்டுக் குளிக்கலாம். அல்லது பீட்ரூட்டை துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு, அதனுடன் வறுபடாத காபி கொட்டைகள் சிலவற்றைப் போட்டு நன்கு அரைக்க வேண்டும். இந்த விழுதை முடியின் வேர் முதல் அடி வரை தடவி ஊற விட வேண்டும். 10 – 15 நிமிடங்கள் கழித்துக் குளித்து வர முடி உதிர்தல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

ஒரு நடுத்தர சைஸ் பீட்ரூட்டுடன் இரண்டு ஸ்பூன் தயிர், பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து முகம், உடலில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 15-20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால் சருமம் மிருதுவாகும்.