Home லைப்ஸ்டைல் ஆணுலகம் குழந்தைப்பேறின்மை பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

குழந்தைப்பேறின்மை பிரச்னைக்கு எளிய தீர்வுகள்!

வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம், பணிச் சுமை, மன அழுத்தம், இணையப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் தாம்பத்தியத்தில் திருப்தியின்மை, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

ஆண்களைப் பொறுத்த வரை பாலியல் ஆர்வம் குறைவு. விரைப்பு தன்மை பிரச்னை, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவு. விந்தணுக்கள் இடப் பெயர்வு இன்மை, டெஸ்டோஸ்டீரன் ஹார்மோன் அளவு குறைவு ஆகியவை குழந்தை இன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளன.

குழந்தையின்மையால் அவதியுறும் ஆண்கள், குழந்தைப் பேற்றுக்கு முயற்சி செய்பவர்கள் செய்ய வேண்டிய சில எளிய முயற்சிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிகச் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் கூட. இது இனப்பெருக்க மண்டல செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. தொடர்ந்து வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை இரண்டு மாதங்களுக்கு எடுத்து வருவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம். மேலும் விந்தணுக்கள் இடப்பெயர்வுக்கும் இவை துணை புரிகின்றன.

மன அழுத்தம் குறையுங்கள்

குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று ஸ்டிரெஸ். மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடலில் கார்டிசோல் என்ற ரசாயனத்தின் அளவு அதிகரிக்கிறது. அது பல வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு கார்டிசோல் அளவு அதிகரிக்கிறது. இது டெஸ்டோஸ்டீரன் அளவைக் குறைக்கிறது. எனவே, மன அழுத்தத்தை தவிர்த்துவிடுங்கள். முடியாத பட்சத்தில் மன நல மருத்துவர் ஆலோசனையை பெறுங்கள்.

வைட்டமின் டி

வைட்டமின் டி-யும் டெஸ்டோஸ்டீரன் அளவு அதிகரிக்கச் செய்யும். வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் அதை சரி செய்ய சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி போதுமான அளவில் கிடைக்கும்போது அது விந்தணுக்களின் இடப்பெயர்வு திறன் அதிகரிக்கச் செய்யும்.

உடற்பயிற்சி

நல்ல உணவுப் பழக்கம், உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது டெஸ்டோஸ்டீரன் ஹார்மோன் அளவு அதிகரிக்கச் செய்து குழந்தைப்பேற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதற்காக அதிகப்படியான உடற்பயிற்சியிலும் இறங்கிவிட வேண்டாம். அதுவும் டெஸ்டோஸ்டீரன் அளவை பாதிக்கும்.

துத்தநாகம்

சிங்க் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துத்தநாகம் என்ற தாது உப்பும் இனப்பெருக்க மண்டல செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்டவற்றில் துத்தநாகம் அதிகமாக உள்ளது. இவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இவற்றுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது, மது, சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவது, தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது போன்றவற்றைப் பின்பற்றினால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்!

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவையில் ரூ.1 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

கோவை கர்நாடகாவில் இருந்து கோவைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தொட்டா என்ன ஆகும்?

பொதுவாக ஒரு சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசு, அதற்கெதிரான போராட்டத்தைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. போராட்டம் என்றாலே பாஜகவுக்கு அது வேப்பங்காய் தான். இதுவரை இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக...

“70 லட்சம் எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு” -ஒரு டாக்டருக்கு ஒரு பொண்ணு எதுக்காக போன் பண்ணுச்சி தெரியுமா?

ஒரு டாக்டரின் மகனை கடத்தி வைத்து கொண்டு ஒரு பெண் உள்பட பலர் 70 லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால் போலீசார் தேடி வருகிறார்கள் .

மருத்துவமனையில் தவறவிட்ட தாலிசெயினை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

தூத்துக்குடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தவறவிட்ட 5 சவரன் தங்க தாலி செயினை சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!