செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் இப்போதைக்கு திறக்கப்படாது!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் இப்போதைக்கு திறக்கப்படாது!

அதிக கனமழை பெய்தால் தான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் இப்போதைக்கு திறக்கப்படாது!

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் 21.13 ஆக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டத்தை எட்ட இன்னும் 3 அடியே இருப்பதால், இன்று மாலைக்குள் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் திருநீர் மலை, குன்றத்தூர், வழுதலம்பேடு, நத்தம் உள்ளிட்ட ஏரியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் இப்போதைக்கு திறக்கப்படாது!

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இப்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015ல் நடந்ததை போல கனமழை பெய்தால் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும் மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டது என்றும் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஏரி திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.