முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு… 30 மின்மோட்டார்களை பறிமுதல் செய்த பொதுப்பணித்துறையினர்!

 

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு… 30 மின்மோட்டார்களை பறிமுதல் செய்த பொதுப்பணித்துறையினர்!

தேனி

உத்தமபாளையம் அருகே முல்லை பெரியாறு ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீரை திருடிய புகாரின் பேரில் 30-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்களை பொதுப்பணித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த அணையில் இருந்து கடந்த ஜுன் மாதம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆறு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட கூடலூர், கம்பம், உத்தமபாளையம், குச்சனூர், சின்னமனூர், சீலையம்பட்டி வழியாக பாய்ந்து வருகிறது.

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு… 30 மின்மோட்டார்களை பறிமுதல் செய்த பொதுப்பணித்துறையினர்!

இந்த நிலையில், முல்லை பெரியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை அதிக திறன் கொண்ட மின்மோட்டார்கள் மூலம் சட்ட விரோதமாக உறிஞ்சப்படுவதாக உத்தமபாளையம் பொதுப்பணித் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன் பேரில், நேற்று உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரேஷ் குமார் தலைமையில், பாசன ஆய்வாளர் மலைச்சாமி, விஏஓ சதிஷ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி பூமிக்கடியில் பதித்துள்ள பைப் லைன்கள் மூலம் சின்னமனூர், ஓடைப்பட்டி, ராயப்பன்பட்டி, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருட்டுத்தனமாக கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டுகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.