ஈரோட்டில் 6 இடங்களில் நீர் தர ஆய்வு: நீர் மாதிரிகளை எடுத்துச்சென்றது தேசிய பசுமை தீர்ப்பாய குழு

 

ஈரோட்டில்  6 இடங்களில் நீர் தர ஆய்வு: நீர் மாதிரிகளை எடுத்துச்சென்றது தேசிய பசுமை தீர்ப்பாய குழு

நீர் தரத்தை மேம்படுத்துவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் ஈரோட்டில் 6 இடங்களில் ஆய்வு செய்து நீர் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

ஈரோட்டில்  6 இடங்களில் நீர் தர ஆய்வு: நீர் மாதிரிகளை எடுத்துச்சென்றது தேசிய பசுமை தீர்ப்பாய குழு

ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் , நீரின் தரத்தை உயர்த்தும் விதமாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உயர்மட்ட குழு அமைத்தது. அக்குழுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்தின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் , பள்ளிபாளையம் நகராட்சி ஆணையர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை சுற்றுச்சூழல் பொறியாளர்
உள்ளிட்டவர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டது ‌.

இக்குழுவானது காவேரி மாசுபடுவதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு மாசு ஏற்பட காரணமான ஆலைகள் மீது நடவடிக்கை
மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு வசூல் செய்யவும் உத்தரவிட்டது.

Central committee study of 12 places in the copper patch: Report to the  Green Tribunal on March 16 | கழிவுநீர், குப்பைகளால்  மாசுபடுகிறதா?..தாமிரபரணியில் 12 இடங்களில் மத்தியக் குழு ...

ஈரோடு மாவட்டத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கிணங்க தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினர் மற்றும் உயர்மட்ட குழுவினர் இன்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, காவிரி ஆறு , வைராபாளையம் குப்பை கிடங்கு மற்றும் பவானி ஆற்று பகுதியில் என 6 இடங்களில் ஆய்வு செய்து , நீர் தரம் குறித்து சுற்றுச்சூழல் அலுவலர்கள் மூலம் நீர் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச்சென்றனர். மேலும் உயர்மட்ட குழுவினரின் தொடர் நடவடிக்கையால் 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.