தொடர் மழை:செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

 

தொடர் மழை:செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

பருவமழையின் தாக்கத்தில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாது கனமழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று அறிவித்திருந்தார்.

தொடர் மழை:செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

இந்நிலையில், செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர் கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி 23 அடியை எட்டியயிருக்கும் சூழலில் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது, அந்த அளவு மாலை 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 6,200 கன‌அடியாக உள்ளது. அதே போல புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 200 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரத்து கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 3080 கன அடி நீர் வருவதால் நீர்திறப்பு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.