கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

 

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். குறுவை சாகுபடிக்காக கல்லணை திறக்கப்படுவதால் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பாசனவசதி பெறும். ஏற்கனவே மேட்டூர் அணை 12 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்லணை அணையும் திறக்கப்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லணையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் சுமார் ரூ.122 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

இதனிடையே கடந்த 12 ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் 5.21 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாசனவசதி பெறுகிறது. விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கன அடி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.