ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு!

 

ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு!

முதல்வர் உத்தரவின் பேரில், ஆழியார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பவானி சாகர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து, முதல்வர் உத்தரவின் பேரில் நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார் அணையையும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு!

அதனால் இன்று முதல் 80 நாட்களுக்கு 2,548 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், தற்போது ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பின் மூலம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இருக்கும் 22,116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.