நிலாவில் தண்ணீர் – வியப்பில் ‘நாசா’

 

நிலாவில் தண்ணீர் – வியப்பில் ‘நாசா’

அமெரிக்க விண்வெளிக் கூடமான நாசா மற்றும் ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நிலா பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன.இதன் ஒருகட்டமாக ‘சோபியா’ எனப்படும் தொலைநோக்கி விமானம் ஒன்று சமீபத்தில் நிலாவிற்கு அனுப்பப்பட்டது. இது உலகின் மிகபெரிய பறக்கும் ஆய்வக விமானமானமாகும். சுமார் 45 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வல்லது. இந்த விமானத்தில் உள்ள அகச்சிவப்பு கேமரா சில முக்கிய படங்களை எடுத்து அனுப்பி உள்ளது.

நிலாவில் தண்ணீர் – வியப்பில் ‘நாசா’


நிலாவின் தெற்கு அரைப்பக்கத்தில் ‘கிளாவியஸ்’என்ற பள்ளம் உள்ளது. இந்தப்பள்ளத்தில் தண்ணீரின் மூலக்கூறுகள் உள்ளதைக் கண்டறிந்து அதனை சோபியா படமெடுத்து அனுப்பியுள்ளது.இதற்கு, முந்தைய ஆய்வில் நிலாவில் இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நீர் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது நிலவின் மேற்பரப்பின் அனைத்து பகுதிகளிலும் நீர் இருக்காலம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நிலாவில் தண்ணீர் – வியப்பில் ‘நாசா’

முதல் முறையாக நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது சோபியா. இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. காற்று இல்லாத நிலாவில் எவ்வாறு தண்ணீர் உருவாகிறது,அது எப்படி சேமிக்கப்படுகிறது என நாசா வியப்பு தெரிவித்துள்ளது.தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.