நெருங்கும் மழைக்காலத்தால் தூய்மையாகும் வேளச்சேரி ஏரி : முதல்வர் பழனிசாமி பாராட்டு!

 

நெருங்கும் மழைக்காலத்தால் தூய்மையாகும் வேளச்சேரி ஏரி :  முதல்வர் பழனிசாமி பாராட்டு!

வேளச்சேரி ஏரியில் தூர் வாரும் பணி மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெருங்கும் மழைக்காலத்தால் தூய்மையாகும் வேளச்சேரி ஏரி :  முதல்வர் பழனிசாமி பாராட்டு!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் காலம் மழைக் காலம் என்பதால் சென்னை மாநகராட்சி இதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தெற்கு வட்டார துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ், கடந்த ஒரு மாத காலமாக வேளச்சேரி ஏரியில் உள்ள ஆகாய தாமரைகளை கொடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அடுத்த 15 நாட்களில் இந்த பணி முழுவதுமாக முடியும். மழை காலத்தால் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துணை ஆணையரின் பதிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,”நீரின்றி அமையாது உலகு” இந்த கொரோனா சூழ்நிலையிலும் நீர்நிலைகளை பாதுகாக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டிற்குரியது. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீர்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்! என்று கூறியுள்ளார்