“மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள்” ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் டீம்!

 

“மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள்” ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் டீம்!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனதால், பொங்கல் பண்டிகையையொட்டி இன்று படம் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் வெளியாவதை முன்னிட்டு அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிய தொடங்கினர்.

“மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள்” ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் டீம்!

இந்நிலையில் ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் படக்குழுவினர் படம் பார்த்து ரசித்துவிட்டு சென்றுள்ளனர். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், நடிகர் சாந்தனு உள்ளிட்டோர் தியேட்டருக்கு வந்தனர்.

“மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள்” ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் டீம்!

அப்போது அவர்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட, லோகேஷ் கனகராஜ், அனைவருக்கும் கையசைத்து தனது நன்றியை தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், ரசிகர்களின் வரவேற்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது; படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள். ரசிகர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்கணும், சானிடைசர் உபயோகிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“மாஸ்டர் படத்தை பார்த்து விட்டு ரிவ்யூ சொல்லுங்கள்” ரோகிணி திரையரங்கில் மாஸ்டர் டீம்!

கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு பெரிய படமாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் கொரோனா பரவலை மறந்து ஆட்டம், பாட்டம் என கொண்டாடியுள்ளனர். சில திரையரங்குகளில் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் படம் பார்க்க முண்டியடித்து வந்தனர். அதே போல் 50% இருக்கைகள் என்பதை மீறி சில தியேட்டர்களில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .