”வேஸ்ட் ஆகும் டேட்டா – வீக்கெண்டுக்கு யூஸ் ஆகும்” – வோடபோன் புது வசதி !

 

”வேஸ்ட் ஆகும் டேட்டா – வீக்கெண்டுக்கு யூஸ் ஆகும்” – வோடபோன் புது வசதி !

வார நாட்களில் பயன்படுத்தப்படாத டேட்டாவை, வார இறுதி நாட்களுக்கு ரோல் ஓவர் செய்து பயன்படுத்தும் புதிய திட்டத்தை பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”வேஸ்ட் ஆகும் டேட்டா – வீக்கெண்டுக்கு யூஸ் ஆகும்” – வோடபோன் புது வசதி !

இதுவரை, தினந்தோறும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்த கட்டண திட்டங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினசரி டேட்டாவை அன்றைக்குள் செலவிட்டு விட வேண்டும். உதாரணமாக தினசரி டேட்டா ஒரு ஜிபி என்றால் 750 எம்பி மட்டுமே செலவு செய்திருந்தாலும், மீதமுள்ள 250 எம்பி டேட்டா அடுத்த நாளுக்கு கேரி வார்வார்டு ஆகாது. பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இத்தகைய நடைமுறையை தான் பின்பற்றுகின்றன. ஆக, 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தப்படாவிட்டாலும் அன்றைய கோட்டா போல கொடுக்கப்பட்ட டேட்டா அன்றைக்குள் முடிந்துவிடும்.

இந்த நிலையில் இந்த முறைக்கு மாறாய், வார நாட்களில் செலவிடப்படாத டேட்டாவை வார இறுதி நாட்களுக்கு ரோல் ஓவர் செய்யும் வசதியை வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 249 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டண திட்டங்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ள வோடபோன் நிறுவனம், தினந்தோறும் பயன்படுத்தப்படாமல் உள்ள டேட்டாவை மிச்சப்படுத்தி, வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்கள் செலவிட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Vodafone, Idea converge into Vi in branding exercise amid telecom war |  Business Standard News

249 ரூபாய் முதல் 2595 ரூபாய் வரை உள்ள கட்டண திட்டங்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என தெரிவித்துள்ள வோடபோன் நிறுவனம், விஐ செயலி மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

வார இறுதி நாட்களில் செலவிடப்படாமல் மிச்சமாகும் டேட்டா அடுத்த வாரத்திற்கு ரோல் ஓவர் ஆகுமா என்பது குறித்து வோடபோன் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆக வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில், தினசரி டேட்டா ரீசெட் முறையை, வாரமாக மாற்றி புதுமையை புகுத்தி உள்ள வோடபோன் நிறுவனம் என்றே சொல்லலாம்.

”வேஸ்ட் ஆகும் டேட்டா – வீக்கெண்டுக்கு யூஸ் ஆகும்” – வோடபோன் புது வசதி !
  • எஸ். முத்துக்குமார்