வாஷிங்டன்-டிக்டாக் நிறுவனம் வெளியேற அவகாசமில்லை – அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்-டிக்டாக் நிறுவனம் வெளியேற அவகாசமில்லை – அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்

டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம் அளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் நிறுவனம் அமெரிக்காவில் தடை செய்யப்படுவதாக கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, இந்த மாதம் மத்தியில் இருந்து அந்த நிறுவனம்

வாஷிங்டன்-டிக்டாக் நிறுவனம் வெளியேற அவகாசமில்லை – அதிபர் டிரம்ப்

வெளியேற வேண்டும். இதையடுத்து அந்த நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், டிக் டாக் நிறுவனத்துக்கு அவகாசம் அளிக்க முடியாது என தெரிவித்தார்.

வாஷிங்டன்-டிக்டாக் நிறுவனம் வெளியேற அவகாசமில்லை – அதிபர் டிரம்ப்

டிக் டாக் நிறுவனம் அமெரிக்க செயல்பாடுகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்தி வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு டிக் டாக் நிறுவனம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சீன நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி, அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.