“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!

 

“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்திருக்கிறது. இருப்பினும் மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் வரலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துங்கள் என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!
“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!

மீண்டும் ஒரு அலை வந்து மீண்டும் ஊரடங்கு போட்டால் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், மக்களிடம் தேவையில்லாமல் விமர்சங்களை வாங்க கூடாது என்பதால் பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்தியிருக்கின்றன. பணக்கார நாடுகளிலுள்ள அரசுகளும் தனியார் நிறுவனங்களும் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ரகரகமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகின்றன.

உணவகங்களில் இலவச உணவு, மதுபானக் கடைகளில் இலவசமாக பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒருசில நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பார்களில் கஞ்சா இலவசமாக கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்க மக்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன் அந்நாடு சுதந்திரமடைந்த ஜூலை 4ஆம் தேதிக்குள் 70 சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!

அதேபோல அனைத்து மாகாணங்களும் சுதந்திர தினத்துக்குள் 70 சதவீத தடுப்பூசி செலுத்தல் இலக்கை அடைய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதிபரின் உத்தரவின்படி பல்வேறு மாகாண அரசுகள் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல பல அதிரடி சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள தனியார் கஞ்சா விற்கும் கடைகளின் ஒரு அறிவிப்பு அனைவரின் புருவத்தையும் உயரச் செய்திருக்கிறது.

“கொரோனா தடுப்பூசி போடு… இலவசமா கஞ்சா இழு” – அதிரடி திட்டம்!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் கஞ்சா இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளன. Joints for Jabs என்ற வாசகத்தோடு இந்தப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஏற்கெனவே கஞ்சா விற்பனை சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அங்கீகரிக்கப்பட்ட கஞ்சா ரோல்கள் இலவசமாக வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.