’வாஷிங்டன், கலிபோர்னியா’ ஜோ பைடன் வெற்றி

 

’வாஷிங்டன், கலிபோர்னியா’ ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க தேர்தல் முடிவு பற்றிய அப்டேட் செய்திகள் ரொம்பவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார். இருவரில் அதிபராவது யார் என்ற கேள்விதான் இன்றைய உலகின் முக்கியமானதாக மாறிவிட்டது.

’வாஷிங்டன், கலிபோர்னியா’ ஜோ பைடன் வெற்றி

இப்போதைய நிலைமைப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 238 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் 213 இடங்களில் முன்னிலையில் உள்ளார்கள்.

வாஷிங்டன் மற்றும் கலிபோரினியாவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

’வாஷிங்டன், கலிபோர்னியா’ ஜோ பைடன் வெற்றி

வாஷிங்டன் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 61 சதவிகித வாக்குகளும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் 36.8 வாக்குகளும் பெற்றனர். இதனால், இந்த மாகாணம் ஜோ பைடன் வசமானது.

கலிபோனியா மாகாணத்தில் ஜோ பைடன் 67.3 சதவிகிதமும், ட்ரம்ப் 30.9 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றனர். இதன்மூலம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் இங்கே வெற்றி பெற்றார்.