விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

‘சின்னக் கலைவாணர்’ என போற்றப்படும் நடிகர் விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

நடிகர் விவேக் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் நேற்றுமுன்தினம் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்கொண்டதின் விளைவால் தான் விவேக்கிற்கு இந்த நிலைமையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

விவேக் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணமா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் தொடர்பில்லை. அரசின் மீதும் , கொரோனா தடுப்பூசி மீதும் நம்பிக்கை என்பது அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வேறுவிதமாக இணைக்கக்கூடாது’ என்று கேட்டுக்கொண்டார். இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இறப்புக்கும் தொடர்பில்லை . நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு தான்’ என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.