வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

 

வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

மதிமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 15ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் வைகோவின் மகன் துரை வையாபுரி மதிமுகவில் துணை செயலாளர் பதவி அல்லது மாநில இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினரிடையே எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் துரை வையாபுரியின் பேச்சு மதிமுகவில் மட்டுமல்லாது திமுகவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில் திராவிட இயக்க பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய துரை வையாபுரி, திராவிடம் மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது. எந்த தனிப்பட்ட மொழிக்கும் திராவிடம் எதிரானது கிடையாது. ஆனால் நுனிப்புல் மேய்ந்துவிட்டு திராவிடம் பற்றிய விளக்கம் அளிப்பவர்கள் தான் மக்களை குழப்பி வருகின்றனர் என்று அழுத்தமாகச் சொன்னவர், நான் 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடியது. அது என்னுடைய கோபத்தை ரொம்பவே அதிகப்படுத்தியது. இதனால் 45 வயதுக்கு மேல் குழந்தைகளை எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நக்சல் ஆகிவிடலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது என்று அவர் பேசியது, திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தபோது லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடியது என்றால், துரை வையாபுரிக்கு 35 வயது என்றால், 1972 இல் பிறந்த துரை வையாபுரிக்கு 2007ஆம் ஆண்டில் தான் 35 வயது. 2007ஆம் ஆண்டில் திமுக ஆட்சி தான் நடைபெற்றது. அதனால் அவர் திமுக ஆட்சியைத் தான் குற்றம் சாட்டுகிறார். திமுக ஆட்சியில் நடந்த லஞ்ச லாவன்யத்தால் தான் நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் வைகோ மகன் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் திமுகவை விமர்சித்து விட்டதாக அக்கட்சியினர் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

35 வயதில் தொழில் செய்து வந்தபோது என்று துரை தயாநிதி சொல்லியிருப்பது, எந்த தொழில் என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவர் புகையிலை பொருட்கள் தயாரிக்கும் ஐடிசி கம்பெனியில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். புகையிலை மற்றும் மதுவுக்கு எதிரான கொள்கை கொண்ட வைகோவின் மகன் புகையிலைப் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் முகவராக இருப்பதால் கடும் விமர்சனம் எழுந்தது. இதை அடுத்து அதிலிருந்து அவர் விலகி கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வைகோ மகனை நக்சலைட் ஆகும் எண்ணத்திற்கு தள்ளியது திமுக ஆட்சியா?

ஐடிசி நிறுவனத்தி முகவராக இருந்து வந்த போதுதான் அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரிடம் லஞ்சம் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். அதனால்தான் அத்தனை ஆவேசத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் துரைவையாபுரி என்கிறார்கள்.

அதே நேரம், எத்தனையோ பிரச்சனைகளில் போராட்டங்களில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று வரும் வைகோ தமிழகத்தில் நக்சலைட் உருவாகுவதை விரும்பாத விரும்பாதவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் ஆயுதங்களை கையில் எடுத்து போராடும் நக்சலைட்டுகளை விரும்பாதவர். ஆனால் அவரின் மகன் நக்சலைட் பற்றி பேசியிருப்பது அதுவும் மதிமுகவில் முக்கிய பதவியை பெறப் போகும் நேரத்தில் இப்படி பேசியிருப்பது அரசியல் அரங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.