புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை!

 

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை!

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பேக்கேஜில், 85 சதவீத இடத்தில் புகையிலைப் பொருட்கள் குறித்த எச்சரிக்கை இடம்பெறவேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு புகையிலை நிறுவனங்களுக்கு வலியுறுத்தி உள்ளது. அப்படி அச்சிடப்படாத புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை கூறியிருந்தது.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை!

இந்த நடைமுறையை புகையிலை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை மாநில அரசு உறுதி செய்வதற்கு தற்போது கடிதம் அனுப்பியுள்ளது. புகையிலைப் பொருள்கள் பேக்கிங்கில் அச்சிடப்பட வாய்ப்புள்ள இடங்களில் 85 சதவீத இடத்தில் எச்சரிக்கை படம் வாசகங்கள் இடம் பெற வேண்டும். இந்தப் படம் 12 மாதங்களுக்கு தொடர்ந்து இடம்பெற வேண்டும். இரண்டு படங்கள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை மாநில அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பல வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை!

இதை கடைப்பிடிக்காத நிறுவனங்களின் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும்,
விற்பனை செய்யப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், சிகரெட் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் இதன்மூலம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். தவறினால் உங்கள் கடையை வைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்.