மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

சிவகங்கையில் அகழாய்வு நடக்கும் கீழடி மணலூரில் சவுடு மண் எடுக்க பெற்ற அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி விவசாய நிலங்களில் அதிக அளவில் மணல் தோண்டி எடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மணல் கடத்தல் விவகாரத்தில் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணல் கடத்தல் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

சவுடு மண் எடுக்க பெறப்பட்ட அனுமதி முறையாகப் பின்பற்றுவது அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மணல் எடுப்பது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பித்து பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் வருகின்றன என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை ஆட்சியர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.