18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கோவை உப்பிலிபாளையத்தில் நடைபெற்றது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள காவலர்கள் சமூக கூடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தான விழிப்புணர்வு, பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநகர போலீசார் கலந்து கொண்டனர்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

இக்கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் எப்படியான சட்ட நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்தான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணை ஆணையர் குணசேகரன், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, போக்சோ சிறப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ராதிகா மற்றும் சிறப்பு குழந்தைகள் பிரிவு ஜெயஸ்ரீ ஐ.பி.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

’’எச்சரிக்கை’’ என்ற வாசகத்துடன் 18 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக நடக்ககூடிய பாலியல் குற்றங்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் எனவும் மரண தண்டனை வரைக்கும் கிடைக்கும் எனவும், அதை 1098 அல்லது காவல்துறை புகார் அளிக்கலாம் என்ற போஸ்டரை வெளியீட்டனர்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு ஜெயஸ்ரீ ஐ.பி.எஸ் அளித்த பேட்டியில், ‘’தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக நடக்ககூடிய குற்றங்கள் எப்படி சட்ட நுனுக்கங்களை கையாள்வது, சமுதாயத்திற்கு எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதியப்படுவதற்கு காரணம் போலீசார் தான், பொதுமக்களுக்கு அதற்கான புரிதலை ஏற்படுத்தி பணி செய்து வருகின்றனர்.

முன்பெல்லாம் குற்றம் நடந்தால் அடுத்தவர்களுக்கு பயந்து வீட்டிற்குள்ளே அடக்கி வைக்கப்பட்ட து. ஆனால் இப்போது இதற்கு தீர்வும். சமூகத்தில் சுற்றித்திரியும் கயவர்களை வெளிகொண்டு வருதற்கான பணியை காவல்துறையினர் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை நம்பிக்கை கொடுத்துள்ளது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களை தடுக்க ‘எச்சரிக்கை’ போஸ்டர்!

எடுத்துக்காட்டாக கோவையில் ரிதன்யஸ்ரீ வழக்கில் தூக்குதண்டனை வாங்கி கொடுத்துள்ளனர். சட்டசபையில் பேசப்பட்ட வழக்கு இதுபோன்றெல்லாம் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்க படுவார்கள் என எடுத்துரைத்துள்ளனர். பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என கருத வேண்டும், தாய் குழந்தை பார்த்துக்கொள்ளும் கடமை மிக முக்கியம், அக்கம் பக்கத்தினர் வீட்டில் குழந்தைகளை விடுவது, அறிமுகமில்லதாவர்களிடம் குழந்தைகள் பழகுவதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்தார்.