‘வார் ரூம்’… கொரோனாவை ஒழித்துக்கட்ட களமிறங்கிய சென்னை காவலர்கள்!

 

‘வார் ரூம்’… கொரோனாவை ஒழித்துக்கட்ட களமிறங்கிய சென்னை காவலர்கள்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சென்னையின் 9 முக்கிய இடங்களில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன அதே போல, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

‘வார் ரூம்’… கொரோனாவை ஒழித்துக்கட்ட களமிறங்கிய சென்னை காவலர்கள்!

இந்நிலையில், மூன்றாவது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் வார் ரூம் என்ற கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. கணினி செயல்பாடுகள் தெரிந்த 30 காவலர்கள் வார் ரூம் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைக் கண்டறியும் பணி இந்த வார் ரூமில் நடைபெறுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வைத்து கடந்த 15 நாட்களில் அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறியவும் அந்த நபர்களை கண்டறிந்து பரவ பரவலை தடுக்கவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அதிகமாக பரவும் இடங்களை கண்டு பிடிக்கவும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நண்பர்கள் மூலமாக கொரோனா பரவுகிறதா என்று கண்டுபிடிக்கவும் இந்த வார் ரூம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.