டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

டிவி வாங்கிற ஐடியாவுல இருக்கீங்களா? இந்த டிவி விலையை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க ! 14 லட்ச ரூபாய்க்கு 85 இன்ச் அளவில் 8கே ரெசல்யூசன் கொண்ட பிரமாண்ட எல்இடி டிவியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

Z8H 8K என்ற மாடல் பெயரில் 85 இன்ச் அளவு திரையுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த பிரமாண்ட டிவி, காஸ்ட்லி டிவி பிரியர்களை குறி வைத்து களம் கண்டிருக்கிறது. இந்த டிவியில் அப்படி என்னப்பா இருக்குதுன்னு உங்க மைண்ட் வாய்ஸ் புரிகிறது. இதை நன்கு புரிந்துகொண்ட சோனி, அதில் எண்ணற்ற சிறப்பம்சங்களை சேர்த்துள்ளது.

இந்த டிவியில், 4கே போல நான்கு மடங்கு சிறந்த படக்காட்சியை அளிக்கவல்ல சோனியின் எக்ஸ்1 அல்டிமேட் பிராசசர் இதில் உள்ளதாம். மேலும் 2கே மற்றும் 4கே படக்காட்சியை ”8கே எக்ஸ் ரியாலிட்டி புரோ” தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 8கே ரெசல்யூசன் படக்காட்சியாக மாற்றக்கூடிய திறன் இந்த அல்டிமேட் பிராசசருக்கு இருக்கிறது என சோனி தெரிவித்துள்ளது.

டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

ஆண்டிராய்ட் இயங்குதளத்துடன் வெளிவந்துள்ள இந்த டிவியில் கூகுள் பிளே ஸ்டோர் இருக்கிறதாம். அதன் மூலம் ஆயிரக்கணக்கான செயலிகளை பதிவிறக்கி பயன்படுத்த முடியும் என்பதோடு, கேம்ஸ்களையும் விளையாடலாமாம். அதுமட்டுமா…யூடியுப், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் என எண்ணற்ற ஓடிடி தளங்களை பயன்படுத்தும் வசதி, மற்றும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் என சகலமும் இந்த டிவியில் உள்ளதாம்.

மேலும் அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்களை இதில் இணைத்துக்கொள்ளலாம் என கூறி உள்ள சோனி, பிளே ஸ்டேஷன் 5 கேமிங் சாதனத்தை இத்துடன் இணைத்து விளையாட இந்த டிவி தயாரிக்கப்பட்டுள்ளதாக சோனி தெரிவித்துள்ளது.

டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

மேலும் எஸ் போர்ஸ் பிரண்ட் சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலி எஃபெக்ட் கொண்ட டிவி என கூறி இருக்கும் சோனி, முற்றிலும் புதிய பிரிமீயம் ரிமோட் ஒன்றையும் டிவியுடன் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

இரவில் தானாகவே ரிமோட் பட்டன்கள் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரிமோட்டின் பின்புறத்தில் விளக்குகள் அமைத்து கெத்து காட்டியிருக்கும் சோனி, ரிமோட்டில் உள்ள மைக்கை பயன்படுத்தி குரல் வழி உத்தரவை பிறப்பித்தும் டிவியை கட்டுப்படுத்தலாம் என தெரிவிச்சிருக்குன்னா பார்த்துக்கோங்க !

டிவி வாங்கப்போறீங்களா? இதப்படிங்க முதல்ல – ” ரூ.14 லட்சத்துக்கு 8 கே டிவி – கெத்து காட்டும் சோனி!

அடேங்கப்பா என ஆச்சரியப்பட வைக்கும் இந்த டிவியின் விலை ஜஸ்ட் 13 லட்சத்து 99,990 ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்