30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

 

30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

நீளமான கருமையான கூந்தல் என்பது பல பெண்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் நீளமான கூந்தல் வளருமா என்றால் அது சந்தேகமே. காரணம் நம் உணவுப் பழக்க வழக்கங்கள், ஜீன் உள்ளிட்டவை கூந்தலுக்கு அடித்தளமாக இருக்கும். வலுக்குறைந்த முடி, பொடுகு, பேன் தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் கூட தன்னம்பிக்கையே குறைத்து விடும். இதனால் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்து விட வேண்டும் என பல பெண்கள் மெனக்கெட்டு வருகிறார்கள். வீட்டிலேயே ஹேர் பேக் மூலம் நீளமான முடியை வளர செய்வது எப்படி என்பதையே இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

10 வயதுக்கு மேற்பட்டோர் இந்த ஹேர் பேக்கை உபயோகிக்கலாம். இந்த ஹேர் பேக்கை 4 வாரங்கள் பயன்படுத்தினால் உங்கள் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். ஆனால் அடர்த்தியான முடிவுக்கு நீங்கள் இதை 3 மாதங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும்.

தேவையான பொருட்கள்

*காய்ந்த கறிவேப்பிலை

*காய்ந்த செம்பருத்தி பூ

30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

*காய்ந்த முருங்கை இலை

*காய்ந்த செம்பருத்தி இலை

*மருதாணி / வெந்தய பொடி

30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

முதலில் காய்ந்த கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி பூக்களை மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு முருங்கை இலை, மருதாணி, செம்பருத்தி இலை போன்றவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளலாம். இந்த அரைத்த கலவையை நீரிலோ அல்லது தயிர் கலந்தோ ஹேர்பேக்-காக வாரம் ஒருமுறை அல்லது 2 முறை பயன்படுத்தலாம்.

30 நாட்களில் நீளமான முடி வேண்டுமா ? இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!

சைனஸ் உள்ளவர்கள் இதை மருதாணிக்கு பதிலாக வெந்தய பொடியை சேர்த்துக்கொள்ளலாம். காய்ந்த கறிவேப்பிலை, காய்ந்த செம்பருத்தி பூ, காய்ந்த முருங்கை இலை, காய்ந்த செம்பருத்தி இலை ஆகிய பொருட்களை நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கி கொள்ளலாம்