• April
    07
    Tuesday

Main Area

Mainநீங்க ஸ்லிம் ஆகணுமா...டயட்டில் கட்டாயம் இவைகளை எல்லாம் சேர்த்துக்கங்க… 

weight-loss
weight-loss

ஸ்லிம்மாக இருக்கணும்கிறதுதான் எல்லாரோட ஆசையும் கனவாகவும் இருக்கும். ஆனால் என்னென்ன சாப்பிடுவதென்று குழப்பமாக இருக்கும். அவர்களுக்கு  இந்த செய்தி உபயோகமாக இருக்கும்.

இப்போதுள்ள நவீன காலத்தில் முக்கால்வாசி மக்கள் கூகுளைப் பார்த்து ஆரோக்யமான உணவுகளைப் பற்றிய தரவுகளைத் தேடிஎடுத்து அவர்களாகவே ஒரு டயட் பிளான் ரெடி பண்ணிக்கொள்கிறார்கள்.எல்லா நேரத்திலும் இது சரியான உணவுக்கான திட்டமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது! ஒவ்வருவருடைய உடல்வாகு,கலோரியின் தேவையைப் பொருத்தும் மாறுபடலாம்.தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி எதையேனும் சாப்பிட்டால் அது எதிர்மறையான விளைவுகளை கொண்டுவந்துவிடும்.ஆகையால் நம்பிக்கையான மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சில ஆரோக்ய உணவுகளை பற்றிய செய்தி இது.

weight-loss

குழப்பாக இருக்கும் உங்களுக்கு தெளிவை தரும்விதத்தில் 5 முக்கியமான உணவுகள் உங்கள் டயட்டில் சேர்க்கவேண்டிய உணவுகளை பற்றிய செய்தி இதோ...

1.முருங்கை இலை:

முருங்கை கீரை பல நன்மைகளை தன்னுள் வைத்துள்ளது. 100கி முருங்கை இலைகளில் எலும்புகளை வலுப்படுத்த 314 mg கால்சியம் நிரம்ப உள்ளது.மேலும் இவை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன் உடல் கொழுப்பையும் குறைக்கும் திறன் கொண்டுள்ளது.இது ஆன்டி மைக்ரோபியல் ப்ரொபர்டீஸையும், உடல் எடையை குறைக்கும் தன்மையையும் நிரம்ப பெற்றுள்ளது. இதன் பௌடர் உங்கள் இதயத்தை ஆரோக்கியதுடன்வைத்துக்கொளவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவினை சீராக வைப்பதற்கும் ரத்த அழுத்தத்தையும், ரத்த குழாய்களில் எந்த அடைப்பும் ஏற்படாதவாறு காக்கிறது. மேலும் தொடர்ந்து முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் கல்லீரலில் சேரும் கொழுப்பும் உடலில் தங்கி இருக்கும் உள் கொழுப்பும் குறைக்கும் ஆற்றல் இந்த முருங்கை கீரைக்கு உள்ளது.

murungai-ilai

2.கம்பு:

கம்பு நம் ஆரோக்கிய உணவுகளில் சிறந்து விளங்கும் ஒன்று.இது க்ளுட்டன் மற்றும் பிற உணவு அலர்ஜி இருப்பவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான உணவு. இதனை எடுத்துக்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது மற்றும் நல்ல செரிமானம் ஆகக்கூடியது.மேலும் இதனை அரிசிக்கு மாறாக உபயோகப்படுத்துவதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும். கம்பு ஐயன், போஸ்பேரோஸ்,மெக்னீசியம்,பைபர் ஆகியவைகளில் நிரம்ப உள்ளது.குறிப்பாக இதயத்திற்கு அதிக நல்லது.

kambu-grain

 

3.காலி பிளவர்:

காலி பிளவர் இப்போது மார்கெட்டுகளில் அதன் மருத்துவ நன்மைகளால் அதிக பேமஸ் ஆகியுள்ளது.ஒருகாலத்தில் ப்ரோக்கோலி தான் அதிக நன்மைகளை உள்ளடிக்கியுள்ளதாக பெயர்பெற்றது அனால் இப்போது காலி பிளவரின் நிருபிக்கப்பட்ட டயட் காம்பௌண்ட்ஸும் அதின் லோ கலோரியும் உடலுக்கு அதிக நன்மைகளை தருகிறது. இது பல நோய்களை அழிக்கும் சக்தி கொண்டுள்ளதாகவும் இதில் வைட்டமின்கள் C , K , B6 , கூடவே நார்சத்து,போலேட் ஆகியவை அதிகம் காணப்படுகிறது.

cauliflower

 

4.க்ரீன் காபி:

க்ரீன் காபி பீன்ஸ் என்பது வறுக்கப்படாத காபி பீன்ஸ் இதில் அதிகளவு CGA எனப்படும் கிளோரோஜெனிக் ஆசிட் அதிகளவு உள்ளது இது உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும்,மேலும் எடை அதிகரிக்காமல் காக்க வல்லது. இதில் உள்ள ப்ரொபேர்ட்டிஸ் கொழுப்பு செல்களை உடைப்பதில் அதிகம் செயல்படுகிறது மேலும் இது கார்போஹைட்ரெட் அளவை உறிஞ்சும் அளவை கட்டுக்குள் வைப்பதால் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி டைப்-2 சர்க்கரை நோய் வரும் அறிகுறிகளுக்கு எதிர்த்து செயல்படுகிறது.

green-coffee

5.நட் மில்க்:

இப்போது பலரும் வீகன்களாக உருவெடுத்துவரும் நிலையில் நட்சுகளிடமிருந்து எடுக்கப்படும் பாலினை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நட்ஸ் உடலுக்கு மிக நல்ல விதமான கொழுப்பை தரவல்லது.ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் டையட்டில் கொழுப்பு சத்தினால் பால் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கின்றனர்,மாட்டு பாலுக்கு பதிலாக இப்போது சோயா மில்க்,வோட் மில்க்,  மில்க்,அல்மோன்ட் மில்க்,மகடமியா மில்க்  என பல ரகங்களில் குறைவான கொழுப்பு அடங்கிய ஆரோக்கியமான மில்க் வகைகள் உள்ளன. இவை அனைத்தும் இயற்கையான முறையில் உடலுக்கு நன்மை தருகிறது.

nut-milk

உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்வதற்கு மேற்கூறிய அனைத்து இயற்கை உணவுகளையும் உண்டு அழகாகவும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்!

2018 TopTamilNews. All rights reserved.