கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை – இருவர் கைது!

 

கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை –  இருவர் கைது!

தூத்துக்குடி

கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில் அச்சக உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு பூங்கா சாலை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(31). தனியார் ஆயில் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி முத்துலெட்சுமி என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை கோயில்பட்டி ஏ.கே.எஸ் திரையரங்கம் அருகே நின்றிருந்த ராம்குமாரை, மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடினர். தகவல் அறிந்த கோயில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.

கோவில்பட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை –  இருவர் கைது!

மேலும், கொலை சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கோயில்பட்டி வ.உ.சி.நகரை சேர்ந்த அச்சக உரிமையாளர் வெங்கடாசலபதிக்கும், ராம்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.

இதனால், வெங்கடாசலபதி மற்றும் அவரது உறவினர் கோபிநாத் ஆகியோர் ராம்குமாரை வெட்டிகொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.