”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

 

”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

ஆப்ஷனல் அப்கிரேட் ஆக விண்டோஸ் 10 இயங்குதளத்தை இயக்கிக்கொள்ளக்கூடிய பிரத்யேக 85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி ஆண்டிராய்ட் டிவியை வியூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

வியூ மாஸ்டர் பீஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த 85 இன்ச் 4கே ஒஎல்இடி டிவியில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. ஆண்டிராய்ட் 9 இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில் விண்டோஸ் 10 பிசி இயங்குதளத்தையும் ஆப்ஷனல் அப்கிரேடாக செய்துகொள்ளலாமாம், இந்த வசதி டிவியிலேயே பில்ட் இன் ஆக உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் டால்பி விஷன் எச்டிஆர் ஸ்டாண்டர்ட் சப்போர்ட் மற்றும் 50 வாட் சவுண்ட்பார் கொண்டது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது என்றும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், உள்ளிட்ட ஒடிடி தளங்களின் செயலிகளை இந்த டிவி சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

மேலும், புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கும் டிவி ரிமோட்டின் மூலமாக கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் பயன்படுத்தி டிவியை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிகிறது. மேலும இந்த டிவியில் குவாட் கோர் பிராசசர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி உள்ளது.

”85 இன்ச் மெகா 4 கே ஒஎல்இடி டிவி – வியு அறிமுகம்” !

இதனிடையே, எந்த டிவியில் இல்லாத சிறப்பம்சம் என்று பார்த்தால், விண்டோஸ் 10 பிசி இயங்குதள அப்கிரேட் தான். இதற்காக டிவியில் இன்டெல் கோர் ஐ5 பிராசசர், உள்ளது என்றும், தேவைப்படுவோர் இதனை அப்கிரேட் செய்துகொண்டு, இந்த டிவியில் வயர்லெஸ் கீபோர்ட் மற்றும் மவுஸ் இணைத்து, அலுவல் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 3.5 லட்ச ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்