Home இந்தியா இனி 'அந்த' மாறி படம்லாம் பார்க்க முடியாதாமே… இந்தியாவில் VPN சேவைக்கு தடை!

இனி ‘அந்த’ மாறி படம்லாம் பார்க்க முடியாதாமே… இந்தியாவில் VPN சேவைக்கு தடை!

இந்தியாவில் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு தான். என்றாலும் கூட ஆன்லைன் மூலம் குறுக்கு புத்தி கொண்ட சிலர் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர். நேரடியாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைக் காட்டிலும் இதுபோன்று திரைமறைவில் இருந்துகொண்டு பணத்தை பறிப்பது மிக எளிதாக இருக்கின்றது. பண மோசடி மட்டுமில்லாமல் குழந்தைகள், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றவும் செய்கின்றனர். தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களும் நுழைந்து வீடியோக்களைப் பார்க்கின்றனர்.

இனி 'அந்த' மாறி படம்லாம் பார்க்க முடியாதாமே… இந்தியாவில் VPN சேவைக்கு தடை!
How to Protect Your VPN: Lessons From a DDoS Attack Test | Radware Blog

தரவிறக்கவும் செய்து ஷேர் செய்கின்றனர். அதேபோல தடை செய்யப்பட்ட வீடியோ கேம்களையும் தரவிறக்கி விளையாடி காசு பார்க்கின்றனர். ஒருசிலர் காசை இழக்கின்றனர். இவையனைத்திற்கும் VPN எனப்படும் Virtual Private Network மூலக்காரணியாக உள்ளது. சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளம் தெரியாதவர்களாகக் காட்டிக்கொள்ள இந்த விபிஎன் சேவை பேருதவியாக இருந்து வருகிறது.குற்றவாளிகள் இணையதளத்தில் என்ன தேடுகிறீர்கள், அவர்கள் செல்லும் வெப்சைட்கள் என அனைத்தையும் இது மறைக்கிறது.

Best Free Porn VPN 2021 | GoingVPN

அதாவது விபிஎன் ஆக்டிவேட் செய்துவிட்டால் ஐபி முகவரி மாறிவிடும். இதனால் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் விபிஎன் மூலம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருப்பது போன்று காட்டும். இதனால் அவர்களை டிராக் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நல்ல விதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு விபிஎன் பாதுகாப்பான அம்சம் தான். ஆனால் குற்றவாளிகள் கையில் சிக்கும் பட்சத்தில் பல நல்லவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறதே. அது தான் இதிலுள்ள மிகப்பெரிய மைனஸ். இச்சூழலில் இந்தியாவில் இந்த விபிஎன் சேவைக்கு தடை கோரி நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

What Is a VPN, and Why You Need One | PCMag

உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில், “விபிஎன் சேவைகளும் டார்க் வெப் சேவையும் சைபர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. குற்றவாளிகளை அடையாளம் தெரியாத வகையில் ஆன்லைனில் செயல்பட அனுமதிக்கிறது. விபிஎன்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இது பெரும் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஆகவே மத்திய உள்துறை அமைச்சகம், ஐடி அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் அதுபோன்ற விபிஎன்களையும் டார்க் வெப்பையும் கண்டறிந்து நிரந்தரமாக தடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி 'அந்த' மாறி படம்லாம் பார்க்க முடியாதாமே… இந்தியாவில் VPN சேவைக்கு தடை!

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews