திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி. பி. துரைசாமி நீக்கம்! பாஜகவில் இணைகிறாரா?

 

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி. பி. துரைசாமி நீக்கம்! பாஜகவில் இணைகிறாரா?

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்த வி.பி. துரைசாமியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பாஜக மாநிலத் தலைவராக பதவியேற்ற முருகனை வி.பி துரைசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் திமுக உள்பட எல்லா கட்சிகளும் ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்றும் அருகில் இருப்பவர்களின் சொற்களை கேட்டு மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டிருக்கிறார் என்றும் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி. பி. துரைசாமி நீக்கம்! பாஜகவில் இணைகிறாரா?

திமுக ஜனநாயக கட்சி என்பதனைவிட ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதால் இது அவர்களுடைய குடும்ப கட்சி எனக் குற்றஞ்சாட்டியுள்ள துரைசாமி, பாஜக தலைவரை சந்தித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்தீர்கிறார்கள் என்றால் என்னுடைய அடுத்தக்கட்ட முடிவு குறித்து யோசிக்க தயாராகிவிட்டேன் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.