நீட் தேர்வு மோடி அரசு கொடுத்த வரம்- பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி

 

நீட் தேர்வு மோடி அரசு கொடுத்த வரம்- பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கலந்தாய்வு மற்றும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர்கள் விபி துரைசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வி,பி. துரைசாமி, “திமுகவும் காங்கிரசும் விவசாய சட்ட திருத்த மசோதாவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் இறங்கி மிரட்டுவதை யாராவது நிரூபித்தால் எந்த நேரத்திலும் நானும் அண்ணாமலையும் அவர்களோடு நேரடியாக விவாதத்திற்கு தயார்.

நீட் தேர்வு மோடி அரசு கொடுத்த வரம்- பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி

நீட் தேர்வை பொருத்தவரை ஏழை மாணவர்களுக்கு மோடி அரசு தந்த வரம். இதனால்தான் தேனி சிலுவார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன் 675 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். அவரால் திமுகவின் மருத்துவக் கல்லூரியில் ஒரு கோடி பணம் செலுத்தி மருத்துவ படிப்பு படிக்க முடியுமா? இது போட்டி நிறைந்த உலகத்தில் முறையான பயிற்சியும் உழைப்பும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். நானும் ஐபிஎஸ் தேர்வு எழுதினேன், அண்ணாமலையும் ஐபிஎஸ் தேர்வு எழுதினார். அவர் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வெற்றி பெற்றார். நான் முயற்சி செய்யாததால் தோல்வி அடைந்தேன்” எனக் கூறினார்.