முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறோம்: பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி

 

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறோம்: பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முதல்வர் பழனிசாமி அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளரா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துனை தலைவர், “கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர், தரையில் உட்கார வைத்தது கண்டனத்திற்குரியது. இதற்கு தமிழக அரசு நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை தேவை. திமுக தலைவர் மிக தாமதமாக இந்த விவகர்த்தில் தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளார் இதற்கு முன்னுரிமை வழங்காமல் கொரோனா மருத்து கொள்முதலுக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். பேரிடர் காலத்திற்கு தணிக்கை குழு தணிக்கை செய்யமுடியாது என்று தெரிந்தும் அதற்கு ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.

முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறோம்: பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி

திமுக கடந்த தேர்தலில் வேளாண் உற்பத்திக்கு அதிக விலை தேவை என்று சொல்லப்பட்டது, நானும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தேன் ஆனால் இன்று அந்த மசோதாவை கொண்டு வந்தால் போராட்டம் நடத்துகிறார்கள். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுகொண்டுள்ளோம். கூட்டணிகள் தமிழகத்தில் மாற வாய்ப்பு குறைவு தான்” எனக் கூறினார்.