நேற்று திமுகவில் இருந்து நீக்கம்.. இன்று பா.ஜ.கவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

 

நேற்று திமுகவில் இருந்து நீக்கம்.. இன்று பா.ஜ.கவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் தற்போது திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால் கட்சி தலைமையுடன் இருந்த கருத்துவேறுபாடு, தனது சொந்த ஊர்காரரும் தமிழக பாஜக தலைவருமான எல். முருகனுடன் கமலாலயத்தில் சந்திப்பு, திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி என பல விவாகரங்களால் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திமுகவில் இருந்து நீக்கம்.. இன்று பா.ஜ.கவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

அதனைத்தொடர்ந்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்தார். மேலும், கலைஞர் அழைத்ததால் தான் வந்தேன் என்றும் திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தார். அப்போது, இல.கணேசன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.