மலைக்கிராமத்துக்கு, கழுதைகளில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

 

மலைக்கிராமத்துக்கு, கழுதைகளில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

தருமபுரி

பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சியில் கோட்டூர் மலைக் கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக் கிராமத்தில் 340 பழங்குடியின வாக்காளர்கள் உள்ளனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மலைக் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில், சுமார் 14 கிலோ மீட்டர் அடர்ந்த வனத்தின் நடுவே செங்குத்தான சாலையில் நடந்து செல்ல வேண்டும்.

மலைக்கிராமத்துக்கு, கழுதைகளில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!

இந்த நிலையில், இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, நேற்று பிற்பகல் அதிகாரிகள் வாகனம் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை கோட்டூர் மலையடிவாரத்தில் உள்ள கன்சல்பேலு கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, அங்கு தயார் நிலையில் இருந்த சின்ராஜ் என்பருக்கு சொந்தமான 5 கழுதைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, மலைக் கிராமத்திற்கு சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனத்தில் நடந்தே கொண்டு சென்றனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக உடன் சென்றிருந்தனர்.