மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பா.ஜ.க.வின் முகுல் ராய், ராகுல் சின்ஹா, திரிணாமுல் காங்கிரசின் ஸ்வபன் டெப்நாத், சந்திரிமா பட்டாச்சார்யா உள்பட மொத்தம் 306 வேட்பாளர்கள் இந்த 6வது கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 6ம் கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு
பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் இன்று நடந்து கொண்டு இருக்கும் 6வது கட்ட தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில், மேற்கு வங்க மக்கள் புதிய சட்டப்பேரவை தேர்ந்தெடுக்க வாக்களித்து வருகின்றனர். இன்று 6வது கட்டத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் நபர்கள் தங்களது உரிமையை பயன்படுத்துமாறு வலியுறுத்துகிறது என பதிவு செய்து இருந்தார்.