“ஓட்டுக்கு பணம் வாங்கலேனு சத்தியம் பண்ணா தான் வாக்களிக்கனும்”

 

“ஓட்டுக்கு பணம் வாங்கலேனு சத்தியம் பண்ணா தான் வாக்களிக்கனும்”

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒவ்வோரிடமும் வாக்குச்சாவடியில் நுழைவதற்கு முன்பாக ஓட்டிற்கு பணம் வாங்கவில்லை என சத்திய பிரமாணம் வாங்கிய பிறகு தான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சூரிய பகவான் தாஸ் என்பவர் மனு அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் தனது கோரிக்கையைப் பரிசீலிக்க ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“ஓட்டுக்கு பணம் வாங்கலேனு சத்தியம் பண்ணா தான் வாக்களிக்கனும்”

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்குவது சாத்தியமில்லாதது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும், அரசையும் அணுகுங்கள்” என்று கூறி வழக்கை முழுமையாக முடித்து வைத்தனர்.