ஜன.15ல் வாக்களர் இறுதிப் பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

ஜன.15ல் வாக்களர் இறுதிப் பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், பிரதான காட்சிகளான அதிமுகவும் திமுகவும் தேர்தல் பணிகளை தொடக்கிவிட்டன. திமுகவில் இதுவரை எந்த குழப்பமும் இல்லை என்றாலும், அதிலிருந்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிரிந்து செல்வதால் கட்சியின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற பெருங்குழப்பம் நீடித்து வந்த நிலையில், அதற்கு முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனையடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜன.15ல் வாக்களர் இறுதிப் பட்டியல் வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை பெயர் சேர்ப்பு, பெயர் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதலை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.