அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி… ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்…

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி… ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்…

அரியலூர்

அரியலூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அரியலூர் பேருந்து நிலையம் பகுதியில் மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி… ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்…

இதில் அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரத்னா கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, 200-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மனித சங்கிலி அமைத்து, வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அரியலூரில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி… ஆட்சியர் ரத்னா தொடங்கி வைத்தார்…

முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் நேர்மையாக வாக்களிப்போம் என ஆட்சியர் ரத்னா முன்னிலையில் பெண்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதனிடையே, அரியலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வார்த்தை வடிவில் அமர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.