திண்டுக்கல் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

 

திண்டுக்கல் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

திண்டுக்கல்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண் மாறியதால், வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

திண்டுக்கல் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

3-வது சுற்று எண்ணிக்கையின் போது 10-வது மேசையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண் மாறியதாக கூறப்படுகிறது. இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வேட்பாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2,800 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.