இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

மத்திய பட்ஜெட் 2021-22 அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் குறிப்பாக பழைய வாகனங்களை அழிக்கும் புதிய கொள்கைகள் குறித்து விளக்கினார்.

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

பழைய வாகனங்களை குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அழிப்பதற்கான புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நீண்ட காலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. இதன்மூலம் மக்களிடையே புதிய வாகனங்களின் தேவை அதிகரித்து உற்பத்தி உயரும் என்பதே அவர்களின் நோக்கம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டியிருக்கிறார்.

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

இதன்படி 15 ஆண்டுகளுக்கு முந்தைய சரக்கு வாகனங்கள், 20 ஆண்டுகளுக்கு முந்தைய கார் உள்ளிட்ட தனிநபர் வாகனங்கள் ஆகியவற்றின் மாசு உமிழ்வைப் பரிசோதிக்க தகுதிச் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்களைத் தகுதிச் சோதனை மையங்களுக்கு அனுப்பிவைத்து பரிசோதிக்கப்படும். மேலும் பழைய வாகனங்களை அழிப்பதற்கு அவற்றின் உரிமையாளர்கள் தாமாக முன்வரும் வகையில் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்றன. உரிமையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

இதுதொடர்பான உரையில் நிதியமைச்சர், “பழைய வாகன அழிப்பு திட்டத்தின் மூலமாக, அதிக எரிபொருள் செலவையும், மாசு உமிழ்வையும் ஏற்படுத்தும் வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியும். அதேசமயம் அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு கொண்ட புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். கச்சா எண்ணெய் வாகன எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பதற்கும் பயன்படும். இத்திட்டம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்” என்று பேசியிருந்தார்.

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

மத்திய அரசின் இந்தத் தன்னார்வ வாகன அழிப்பு கொள்கைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் மின்சார வாகன உற்பத்தியை அரசு ஊக்குவித்துவருகிறது. அதற்கான வெளிநாட்டு முதலீடுகளையும் பிரபலமான வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்துவருகிறது. அந்த வகையில் பிரபல மின்சார கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால்தடம் பதித்திருக்கிறது.

இது பழைய கார்களுக்கு பை சொல்லும் நேரம்; எலக்ட்ரிக் கார்களுக்கு ஹாய் சொல்லும் காலம்!

மக்களிடம் டெஸ்லா மீதான நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மின்சார வாகன நுகர்வை அதிகப்படுத்தி, உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம். பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டி உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் ஒசூரில் அமைக்கவிருப்பதும் கவனித்தக்கது.