குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு – சியோமி அறிமுகம்

 

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு –  சியோமி அறிமுகம்

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி விளக்குகளை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு –  சியோமி அறிமுகம்

இந்த வெள்ளை நிற எல்இடி விளக்குகள் 7.5 வாட்ஸ் கொண்டது என்றும் இதனை அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் என இரண்டையும் பயன்படுத்தி குரல் வழி உத்தரவிட்டு கட்டுப்படுத்தலாம் என சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விளக்கின் வெளிச்சத்தை எம்ஐ ஹோம் செயலி மூலமாக அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும் என தெரிவித்துள்ள சியோமி நிறுவனம், இது 810 லூமன்ஸ் அளவுக்கு ஒளியை தரவல்லது என்றும் தெரிவித்துள்ளது.

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு –  சியோமி அறிமுகம்

இதனை வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண பல்பு ஹோல்டர்களில் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள சியோமி, 499 ரூபாய்க்கு இது எம்ஐ ஸ்டோரில் விற்பனைக்கு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குரலுக்கு கட்டுப்படும் ஸ்மார்ட் எல்இடி பல்பு –  சியோமி அறிமுகம்
  • எஸ். முத்துக்குமார்