”VI என பெயர் மாற்றம்” – வோடபோன் ஐடியா திட்டம்

 

”VI என பெயர் மாற்றம்” – வோடபோன் ஐடியா திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் VI என்ற பெயரில் தனது பிராண்டு பெயரை மாற்றிக்கொள்ள உள்ளது.

”VI என பெயர் மாற்றம்” – வோடபோன் ஐடியா திட்டம்

இங்கிலாந்தை சேர்ந்த வோடபோன் நிறுவனம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஐடியா செல்லுலார் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதன்பிறகு வோடபோன் ஐடியா என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில காலாண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தில் சிக்கித்தவித்து வரும் இந்நிறுவனம் அலைக்கற்றை மற்றும் உரிமம் தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. இது தொடர்பான வழக்கை விசாரித்த

”VI என பெயர் மாற்றம்” – வோடபோன் ஐடியா திட்டம்

உச்சநீதிமன்றம், பாக்கி தொகையை செலுத்த பத்து ஆண்டுகள் வரை வோடபோன் நிறுவனத்துக்கு அவகாசம் அளித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, உத்தரவிட்டது. இதனால் சற்றே ஆறுதலான நிறுவனம், தற்போது தனது பெயரை மாற்றி நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்துள்ளது.

”VI என பெயர் மாற்றம்” – வோடபோன் ஐடியா திட்டம்

அதன் படி வோடபோன் ஐடியா என்ற பெயரை சுருக்கி VI என பெயர் மாற்றி நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்ட திட்டமிட்டுள்ளது.
S.முத்துக்குமார்