நஷ்டம்… நஷ்டம்.. சோகத்தில் வோடாபோன் ஐடியா….

 

நஷ்டம்… நஷ்டம்.. சோகத்தில் வோடாபோன் ஐடியா….

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.11,643.5 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) அந்நிறுவனம் ரூ.6,438.8 கோடி இழப்பை சந்தித்து இருந்தது. 2019 மார்ச் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.4,881.90 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

நஷ்டம்… நஷ்டம்.. சோகத்தில் வோடாபோன் ஐடியா….

வோடாபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. 2020 மார்ச் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.11,754.2 கோடியாக உள்ளது. மேலும் அந்த காலாண்டில் அந்நிறுவனத்துக்கு ஒரு வாடிக்கையாளர் வாயிலான சராசரி வருவாய் ரூ.109-லிருந்து ரூ.121ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 29.10 கோடியாக குறைந்துள்ளது.

நஷ்டம்… நஷ்டம்.. சோகத்தில் வோடாபோன் ஐடியா….

2019 ஏப்ரல்- 2020 மார்ச் வரையிலான சென்ற நிதியாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.73,878 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய நஷ்டமாகும். சென்ற நிதியாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.44,957.50 கோடியாக உயர்ந்துள்ளது.