விலகும் சந்தாதாரர்கள், அதிகரிக்கும் நஷ்டம்… கலக்கத்தில் வோடாபோன் ஐடியா…

விலகும் சந்தாதாரர்கள், அதிகரிக்கும் நஷ்டம்… கலக்கத்தில் வோடாபோன் ஐடியா…

நாட்டின் 3வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடாபோன் ஐடியா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.25,460 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 8வது காலாண்டாக சென்ற காலாண்டிலும் வோடாபோன் ஐடியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

விலகும் சந்தாதாரர்கள், அதிகரிக்கும் நஷ்டம்… கலக்கத்தில் வோடாபோன் ஐடியா…

ஒரு முறை கட்டணமான சட்டரீதியான நிலுவை தொகை மற்றும் சந்தாதாரர்களை தொடர்ந்து இழந்து வருவது போன்ற காரணங்களால் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ஒரு சந்தாதாரர் வாயிலான சராசரி வருவாய் ரூ.114ஆக குறைந்தது. முந்தைய காலாண்டில் இது ரூ.121ஆக இருந்தது.

விலகும் சந்தாதாரர்கள், அதிகரிக்கும் நஷ்டம்… கலக்கத்தில் வோடாபோன் ஐடியா…

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் வோடாபோன் ஐடியா 1.13 கோடி சந்தாதாரர்களை இழந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி அந்நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 27.98 கோடியாக சரிவடைந்தது. மேலும் அந்த காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.10,659 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. முந்தைய காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.11,754.2 கோடியாக உயர்ந்து இருந்தது. கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.1.16 லட்சம் கோடி நிகர கடன் உள்ளது.